நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரனின் அலுவலகம் பொலிசாரால் முற்றுகை!
#Kilinochchi
#Police
Yuga
3 years ago

கிளிநொச்சியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது அலுவலகமான அறிவகம் இலங்கை பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
அலுவலகத்திற்கு வந்து செல்லும் அனைவரும் பொலிஸாரால் அடாவடி விசாரனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
அலுவலகத்திற்கு உள்ளே எவரையும் உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிற்கிறார்கள். கரைச்சி, பளை பிரதேச சபையின் தவிசாளர்கள் பாராளுமன்ற உறுப்பினரை சந்திக்க உள்ளே சென்ற போது பொலிசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் குறித்த பொலீசாரிடம் ஏன் இவ்விடத்தில் நிற்கிறீர்கள்? அலுவலகத்திற்கு வருவோருக்கு தடையை ஏற்படுத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு “மேலிடத்து உத்தரவு என்று பதில் கூறி இருக்கிறார்கள்”.



