22.09.2021 இன்றைய ராசி பலன்

Prabha Praneetha
2 years ago
22.09.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்:

அசுவினி: வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். மன மகிழ்ச்சி உண்டு.
பரணி: உற்றார், உறவினர்கள் உங்களைப் பாராட்டும் சந்தர்ப்பம் வரும்.
கார்த்திகை 1: நல்ல பணியில் சேர அழைப்புகள் வரும் நாள். மாணவர்கள் மகிழ்வர்.

ரிஷபம்; 

கார்த்திகை 2,3,4: உங்களது பணியில் நல்ல நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
ரோகிணி: குடும்பத்தில் ஒருவருக்கு இருந்து வந்த சிரமம் அகலும்.
மிருகசீரிடம் 1,2: திட்டம் ஒன்றை செயல்படுத்த மாற்று இனத்தவர் உதவி செய்வர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: பணவரவு திருப்தி தரும். இன்று முழுக்க பிஸியாக இருப்பீர்கள்.
திருவாதிரை: நினைத்தது நிறைவேற சற்றுப் பாடுபட வேண்டியிருக்கும்.
புனர்பூசம் 1,2,3: பணவரவு உங்கள் முயற்சியால் நன்றாகவே இருக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: உங்களுக்கு நெருக்கடி தந்து கொண்டிருந்த பிரச்னை ஒன்று தீரும்.
பூசம்: மனதில் அமைதி நிலவும். குடும்ப ஒற்றுமை நீடிக்கும்.
ஆயில்யம்: நண்பர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: குடும்பத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.
பூரம்: யாரிடமும் தவறாகப் பேசி சிரமத்துக்குள்ளாக வேண்டாம்.
உத்திரம் 1: சகபணியாளருடன் இணைந்து முக்கியமான வேலை ஒன்றை முடிப்பீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: முயற்சி செய்வோருக்கு நல்ல வேலை கிடைக்கும்.
அஸ்தம்: நீங்கள் மதிப்போரின் பாராட்டுதல்கள் கிடைத்து மனம் மகிழும்.
சித்திரை 1,2: சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். பயம் நீங்கும்.

துலாம்

 சித்திரை 3,4: பல நாளாக இருந்து வந்த இக்கட்டான சூழ்நிலை விலகும்.
சுவாதி: தொழில் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும். மகிழ்ச்சி கூடும்.
விசாகம் 1,2,3: வாழ்வில் முன்னேறுவதற்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: யாருடனும் சண்டை சச்சரவுகள் வேண்டாம். சரும நோய் தீரும்.
அனுஷம்: சகபணியாளரின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். பணிச்சுமை குறையும்.
கேட்டை: தொழில் சிறக்க புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்குவீர்கள்.

தனுசு

 மூலம்: தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். பல நாள் வருத்தம் தீரும்.
பூராடம்: திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும்.
உத்திராடம் 1: மாணவர்கள் கல்வியில் புதிய உத்வேகம் பெறுவார்கள்

மகரம்

 உத்திராடம் 2,3,4: இளைஞர்கள் கல்வியில் நன்கு கவனம் செலுத்துவீர்கள்.
திருவோணம்: கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பு வரும். சுறுசுறுப்பான நாள்.
அவிட்டம் 1,2: முயற்சி ஒன்று வெற்றியளிக்கும். சேமிக்கும் எண்ணம் தோன்றும்.

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கு அவசரம் வேண்டாம்.
சதயம்: புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலை ஆர்வம் அதிகரிக்கும்.
பூரட்டாதி 1,2,3: குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல செய்தி உண்டு.

மீனம்

 பூரட்டாதி 4: நிதி நிலைமை ஓரளவு நல்லபடியாக இருக்கும்.
உத்திரட்டாதி: எடுக்கும் முயற்சி ஒன்றில் சுமாரான முன்னேற்றம் இருக்கும்.
ரேவதி: அலுவலகப் பணிகளில் சற்று அழுத்தம் இருக்கக்கூடும்