ஐநா கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் பிரித்தானிய பிரதமரின் வேண்டுகோள்!
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள முக்கிய COP26 காலநிலை மாற்ற மாநாட்டிற்கு முன்னதாக ஏனைய நாடுகள் நிதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான பதிவுகளை மேற்கொள்ள 10க்கு 6 என்ற வாய்ப்பு உள்ளது என்று இங்கிலாந்து பிரதமர் கூறியுள்ளார்.
போரிஸ் ஜோன்சன் ஐநா சபையின் கூட்டத்திற்காக அமெரிக்காவில் உள்ளார். அவர் அங்கு இந்த பிரச்சினை சம்பந்தமாக உறுதியான நடவடிக்கை எடுக்க தலைவர்களை வலியுறுத்துவார்.
ஆனால் காபன் வாயு வெளியேற்றத்தை குறைக்க வளரும் நாடுகளுக்கு ஆண்டிற்கு 100பிலியன் டொலர்களை வழங்க நட்பு நாடுகளை வற்புறுத்துவது கடினம் எனவும் கூறினார்.
இங்கிலாந்து கிளஸ்கொவில் இந்த காலநிலை மாற்ற மாநாடு நடக்கவிருக்கிறது.



