கனடா - வாட்டலு பிராந்தியத்தில் ஒரு வயது குழந்தை சடலமாக மீட்பு
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

சனிக்கிழமை பகல் சுமார் 9 மணியளவில் வெல்லெஸ்லி டவுன்ஷிப்பில் பவல் சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விசாரிக்க சென்ற பொலிசார், குறிப்பிட்ட குடியிருப்பில் ஒரு வயதேயான குழந்தை ஒன்றை சடலமாக மீட்டுள்ளனர்.
இதனையடுத்து குழந்தையின் தந்தையான 31 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும், ஆனால் வேறு சந்தேக நபர்களை தேடவில்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.



