ஓமந்தை பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம்: ஆலய குருக்கள் உட்பட 6 பேருக்கு கோவிட்

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடம் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் ஆலய குருக்கள் 6 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தற்போதைய கோவிட் பரவல் நிலையை அடிப்படையாக கொண்டு ஓமந்தை, நொச்சிக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு சுகாதாரப் பிரிவினர் 9பேருக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
ஆலய நிர்வாகத்தினர், உபயகாரர் என 9 பேருக்கே சுகாதாரப் பிரிவினர் அனுமதி வழங்கியிருந்தனர்.
ஆனால், கும்பாபிஷேகத்தில் 20 பேருக்கு மேல் கலந்து கொண்டுள்ளதாகவும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து அங்கு சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலை மீறி ஆலயத்தில் நின்ற 20 பேரிடமும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் ஆலய குருக்கள் உட்பட 6 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களும், அவர்களுடன் தொடர்புடையவர்களும் சுகாதாரப் பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.



