அதிகரித்து வரும் மயில்களின் நடமாட்டம்

#SriLanka
Prasu
3 years ago
அதிகரித்து வரும் மயில்களின் நடமாட்டம்

அம்பாறை மாவட்டத்தில் வெளாண்மை செய்கை அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில் பெரும்போக செய்கை ஆரம்பமாக உள்ள நிலையில் காலை முதல் மாலை வரை மயில்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மக்களினால் கைவிடப்பட்டுள்ள வெற்றுக்காணிகள் வயல் வெளிகளில் உள்ள விசஜந்துக்களான பாம்புகள் பூராண்கள் தேள்கள் நண்டுகள் விசப்பூச்சிகளின் தொல்லை மயில் கூட்டங்களின் வருகையினால் குறைவடைந்துள்ளதுடன் விசஜந்துக்களின் நடமாட்டங்களும் மயில்களின் விகாரமான சத்தங்களினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

குறிப்பாக நல்லபாம்பு உள்ளிட்ட விதைப்பு காலங்களில் விசஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்ட போதிலும் இப்பகுதிக்கு எண்ணிக்கையற்ற மயில் கூட்டங்கள் வருகை தந்து விசஜந்துக்களை கட்டுப்படுத்தி வேட்டையாடி வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

மயில் கூட்டங்களின் வருகையினால் அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஒலுவில், அட்டாளைச்சேனை, மத்தியமுகாம், நாவிதன்வெளி, சவளக்கடை, சம்மாந்துறை பகுதிகளில் விசஜந்துக்களின் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!