சுவிற்சலாந்தில் கொவிட் சான்றிதழை பெறுவது எப்படி?

சுவிஸ் கொவிட் சான்றிதழானது உங்கள் கொவிட் நிலை பற்றிய தகவல்களைக் கொண்ட ஒரு QR குறியீடாகும். இது தடு்ப்புசி தொற்றிலிருந்து மீண்ட அல்லது சமீபத்தில் சோதிக்கப்பட்ட மறை பெறுபேறுகளை காகிதத்தில் அல்லது மின்னணு வடிவத்தில் கொண்ட கைத்தொலைபேசி செயலி ஆகும்.
இது பெரும் பாலும் வெளிநாட்டு பயணம், பல நாடுகள் நுழைய அல்லது பொது இடங்களை அணுக தேவைப்படலாம். 4ம்திகதி ஜுன் 2021 சுவிற்சாலந்தின் பெடரல் சபை கொவிட் 19 சான்றிதழ்கள் பற்றிய ஒரு சட்டத்தை ஏற்றுக்கொண்டது. இது சான்றிதழ்கள் வழங்குவதற்கான சட்டத்தை அடிப்படையாக கொண்டது. 7ம்திகதி ஜுன் 2021 இல் இந்த சட்டம் நறைமுறைக்கு வந்தது.
கொவிட் சான்றிதழைப்பெற பெருமபாலனவர்கள் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு கன்டோனுக்கும் வெவ்வேறு திகதி மற்றும் முறைகள் உள்ளன.
மருத்துவ நடைமுறைகள், தடுப்பூசி மையங்கள் சோதனை மையங்கள் மருத்துவமனைகள் ஆய்வகங்கள், மருந்தகங்கள், மற்றும் கன்டோனல் நிருவாகம் ஆகியவை தடுப்பூசியை தொடர்ந்து சோதனைகள் செயலாக்கப்பட்ட பின்பு QR குறியீடு அடிப்படையிலான சான்றிதழ்களை வழங்கும்.
ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டவர்கள் ஒன்லைனில் சான்றிதழை பெற விண்ணப்பிக்கலாம். அல்லது சான்றிதழ் வேண்டும? என்று கேட்கும் மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் பெற காத்திருக்க வேண்டும். சான்றிதழ் வேண்டும் என்று உறுதிசெய்தவுடன் அவர்களுக்கு அதைப்பெறலாம். எனினும் ஒவ்வொரு கன்டோனுக்கும் சொந்த செயல் முறை உள்ளது. அதனை சரிபார்க்க வேண்டியது அவசியம்.
முழு தடுப்பூசி தொடர்பான சான்றிதழ்கள் இரண்டாவது டோஸ் தேதியிலிருந்து 180 நாட்களுக்கு செல்லுப்படியாகும்.
இரண்டு தடுப்பூசிகளையும் பெறாதவர்களுக்கு செயல் முறை வித்தியாசப்படும். பாதிக்கப்பட்ட அல்லது மீண்ட ஒருவர் ஒன்லைனில் விண்ணபித்து தபால் மூலம் சான்றிதழை பெறவேண்டும். இதற்கு சுமார் 7 நாட்கள் ஆகும். பிசிஆர் சோதனைக்கான நேர்மறை ஆதாரம் தேவைப்படும். இந்த சான்றிதழ்கள் நேர்மறை சோதனை தேதியிலிருந்து 11 நாட்களில் இருந்து 180 நாட்களுக்கு செல்லுப்படியாகும் அன்ரிஜன் மற்றும் செரோலஜ் சோதனைகள் தொற்றுக்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
சுய பரிசோதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படமாட்டாது. மாதிரி எடுக்கப்பட்டதில் இருந்து பிசிஆர் சோதனை சான்றிதழ்கள் 72 மணிநேரம் செல்லுப்படியாகும். மற்றும் அன்ரிஜன் 24 மணிநேரம் செல்லுப்படியாகும்.
சரிபார்ப்பு பயன்பாட்டைப் பயன்படுத்தி கொவிட் சான்றிதழ்களை சரிபார்க்கலாம். சான்றிதழ்களை சரிபார்க்கும் போது ஒருவருடைய ஆள் அடையாளத்தை வழங்குமாறு உரிமையாளரை கேட்கலாம். இதன் மூலம் குறிப்பிட்டவர் உடையது தான் இந்த கொவிட் சான்றிதழ் என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். சரிபார்ப்பு செயலி சான்றிதழ் செல்லுப்படியாகுமா? ,சோதனையின் போது சேர்க்கப்பட்ட தகவல் என்பனவற்றைக்காட்டும்.
இந்த கொவிட் சான்றிதழானது உங்கள் கைத்தொலைபேசியில் மட்டும் தான் சேமிப்பு செய்யப்படும். இதற்கென ஒரு மைய சேமிப்பு கிடையாது. ஆகவே தொலைபேசியை தொலைத்தால் அல்லது அச்சிடப்பட்ட காகிதத்தினை தொலைத்தால் நீங்கள் மீண்டும் ஒன்றை பரிசோதனை செய்த அல்லது தடுப்புசி ஏற்றிய இடத்தில் பெறவேண்டும்.
சுவிற்சலாந்து அரசாங்கமானது சான்றிதழை வழங்கும் போது அதன் உத்தியோகபுர்வ மொழி அல்லது ஆங்கில மொழியில் வழங்கி அவை சர்வதேச ரீதியாக செல்லுப்படியாகும் தன்மையை நோக்காக கொண்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டால் சான்றிதழுடன்.



