களுத்துறைச் சிறைக்சாலைக்குள் பார்சலை வீசிய நபரைத் தேடி தீவிர விசாரணை
#Prison
#Investigation
Prathees
3 years ago

களுத்துறை சிறைச்சாலையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பார்சல் ஒன்றை வீசிய நபரைக் கண்டுபிடிக்க விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
குறித்த நபர் பார்சலை சிறையின் டி பிரிவில் வீசியதை சிறைச்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமெராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அவதானித்தபின், களப்பணி மற்றும் ஆயுத அலுவலர்கள் போதைப்பொருளைக் கொண்ட பார்சலைக் கண்டுபிடித்துள்ளனர்.
பார்சலில் 68 ஹெரோயின் பாக்கெட்டுகள், 13 மாத்திரைகள், 10 புகையிலைகள், 03 மொபைல் போன்கள் மற்றும் 02 மொபைல் போன் சார்ஜர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைப்பட்டப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் பிற சட்டவிரோத போதைப்பொருட்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



