சீனாவில் மீண்டும் தலை தூக்கியது கொரோனா

கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஃபெங்டிங் நகரம் கொவிட்-19 அதிகமாக பரவும் அபாயகரமான பகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளது
செப்டம்பர் 10 முதல், புஜியான் மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 21 ஆக பதிவாகியுள்ளது.
மாகாண சுகாதார ஆணையத்தின்படி, மாகாணத்தில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளூரில் பரவும் அறிகுறியற்ற 21 பேர் உள்ளனர். என அறிவித்துள்ள சியான்யோவின் கொவிட் -19 தலைமையகம், குடியிருப்பாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும் பொதுப் போக்குவரத்தின் போது முகக்கவசங்களை கட்டாயமாக அணியுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் பெரிய கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் உட்புற பொழுதுபோக்கு இடங்களான அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவை வழங்குநர்களில் வாடிக்கையாளர்களின் வருகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.
வைரஸ் மரபணு வரிசைமுறையானது, தொற்றுநோயான டெல்டா மாறுபாடு விகாரங்களை என அடையாளம் கண்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.



