வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்க்கு கோவிட் தொற்று
#Covid 19
#Jaffna
#M K Sivajilingam
Prathees
3 years ago

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகயீனம் காரணமாக வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு இன்று முற்பகல் சென்ற அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்றுள்ளமை உறுத்திப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, அவர் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்ற அடிப்படையில் எம்.கே.சிவாஜிலிங்கம் அம்புலன்ஸில் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் உள்ள சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



