யானைகளை பாதுகாப்பதில் நான் உதவியற்றவளாக இருந்தேன்: இஷினி

யானைகளைப் பாதுகாப்பதில் தான் உதவியற்றவளாக இருந்ததாக தேசிய விலங்கியல் பூங்காத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திலிருந்து பதவி விலகிய இஷினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவின் மூலம் இதனை தெரிவித்துள்ளார்.
பின்னவல சரணாலயத்திலிருந்து யானைகள் வலுக்கட்டாயமாக எடுத்துச்செல்லப்படுவதை தடுப்பதற்கும் யானைகளைப் பாதுகாப்பதற்கும் தான் உதவியற்றவளாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஸ்ரீ தேவி’ பின்னவலையில் உள்ள மிகவும் அன்பான மற்றும் பாசமுள்ள யானை. நான் அவளை பாதுகாப்பதில் உதவியற்றவளாக இருந்தேன். மற்றும் பிற யானைகள் பின்னவலையில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக இஷினி தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக பிடிபட்ட யானைகளை கடத்தல்காரர்களுக்கு திருப்பி அனுப்புவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இஷினி விக்ரமசிங்க தேசிய விலங்கியல் துறையின் தலைமை பணிப்பாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.



