இலங்கையில் 12 – 18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்த GMOA அனுமதி
#SriLanka
#Corona Virus
#Covid Vaccine
#children
Yuga
4 years ago

12 -18 வயதுக்குட்பட்டவர்களுக்கு WHO வால்அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர் தடுப்பூசியை இலங்கையிலும் வழங்க சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நேற்று ஒப்புதல் அளித்ததாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ கூறினார்.
12 -18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்குவதன் மூலம், கோவிட் சிக்கல்கள் மற்றும் இறப்புகளை தடுக்க முடியும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும், கொரோனா ஒழிப்புக்குழுவின் ஒப்புதலுடன், விரைவில் தடுப்பூசியை போடத் தொடங்குவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை, 12 – 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்காக அடுத்த மாதம் 4 மில்லியன் டோஸ் ஃபைசர் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் வைத்தியர் செனல் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.



