இலங்கை பொலிஸாரால் தேடப்படும் பொப் மார்லி!
#SriLanka
#Police
Yuga
4 years ago

இலங்கை பொப் மார்லியை பொலிஸார் தீவரமாக தேடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலின் பிரதான சந்தேநபராக கருதப்படும் சமிந்த தாப்ரோவ் அல்லது பொப் மார்லியை பொலிஸ் திணைக்களம் தேடி வருவதாக அறிவித்துள்ளது.
இதற்காக பொலிஸ் திணைக்களம் தற்போது பொதுமக்களின் உதவியை நாடுவதாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் பேருவளை கடற்கரையில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் 288 கிலோ 644 கிராம் போதைப்பொருளுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இருப்பினும், இந்த போதைப்பொருளை நாட்டுக்கு கொண்டுவந்த பிரதான சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகிறது.



