உக்ரைனில் அதிகமாகும் கொரோனா பாதிப்பு 2,197 பேருக்கு உறுதி
#Covid 19
Prasu
4 years ago

உக்ரைனில் கொரோனவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 2,197 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,00,504-ஆக உயா்ந்துள்ளது.
இது தவிர, மேலும் 53 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 54,054-ஆக உயா்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
உக்ரைனில் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த 22,14,606 பேர் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 31,844 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 177 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.



