நோக்கியோ 3310 என்ற மாடல் செல்போனை விழுங்கிய நபர்:அதிர்ச்சி தகவல்!

Keerthi
4 years ago
நோக்கியோ 3310 என்ற மாடல் செல்போனை விழுங்கிய நபர்:அதிர்ச்சி தகவல்!

கொசோவோ நாட்டின் பிரிஸ்டினா பகுதியைச் சேர்ந்த 33 வயது நபர் ஒருவர், பழைய நோக்கியோ 3310 என்ற மாடல் செல்போனை வைத்து இருந்தார். இவர் அந்த செல்போனை வாயின் அருகே வைத்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த செல்போனை விழுங்கியுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்ற அவர் செல்போனை விழுங்கிய தகவலை தெரிவித்துள்ளார். உடனே மருத்துவர்கள் அவருக்கு எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில், வயிற்றில் செல்போன் இருக்கும் இடம் துல்லியமாக கண்டறியப்பட்டுள்ளது.

வயிற்றுக்குள் சென்ற செல்போனின் பேட்டரி தனியாக பிரிந்தும் கிடந்துள்ளது. தொடர்ந்து, மருத்துவர்கள் 2 மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்த செல்போன மற்றும் அதன் பாகங்களை அகற்றியுள்ளனர்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் டெல்ஜாகு தனது பேஸ்புக் பக்கத்தில் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட செல்போனின் புகைப்படங்களையும், அது வயிற்றுக்குள் இருந்த போது எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

பேட்டரி குறித்து தான் எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது; ஏனென்றால் அது மனிதனின் வயிற்றில் வெடிக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அந்த நபர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!