பிரான்சின் இரண்டாவது நீதியரசரும், சட்டமா அதிபருமான பிரோன்சுவா மொலன் மீது பல்லாயிரக்கணக்கான வழக்குகள்...
Mugunthan Mugunthan
4 years ago

பிரான்சின் இரண்டாவது நீதியரசரும், சட்டமா அதிபருமான பிரோன்சுவா மொலன் (Procureur général François Molins) அவர்களிற்கு தலைவலியும் அதிகமான வேலையும் ஏற்பட்டுள்ளது.
கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளில் முறையான துரித நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும், இதன் மூலம் நடந்த சாவுகளிற்கான வேண்டுமென்றே செய்யாத கொலைக்குற்றத்தின் பேரிலும், பல அமைச்சர்கள் மீதும், எமானுவல் மக்ரோன் மீதும் ஆயிரக்கணக்கான வழக்குகள், வழக்காடு மன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் பல்லாயிரக் கணக்கில் போடப்பட்டுள்ளன. இதற்கு தொடர்பாடல் உலகின் நவீனத்துவமும், இணையத் தொடர்பின் வளர்ச்சியுமே காரணம். இதனாலேயே மிக விரைவாக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன
«இதில் எத்தனை வழக்குகள் ஏற்றுக்கொள்ளப்படும், எத்தனை வழக்குகள் விசாரணைக்குத் தகுந்தவை என்பதை நீதியரசர்களே திர்மானிப்பார்கள்»



