வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நவம்பர் 15 வழக்கு இறுதித் தீர்ப்பு!

#world_news
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நவம்பர் 15 வழக்கு இறுதித் தீர்ப்பு!

”நவம்பர் 13” பயங்கரவாத தாக்குதலை அத்தனை எளிதில் எவரும் மறந்துவிட முடியாது. 130 பேரின் உயிரை காவு வாங்கிய அந்த கோர தாக்குதலின் இறுதிக்கட்ட தீர்ப்பு நாளை மறுநாள் புதன்கிழமை ஆரம்பிக்கின்றது.
* 130 பேர் கொல்லப்பட்டும், 400 பேர் வரை காயமடைந்தும் உள்ள இந்த தாக்குதல் 2015 ஆம் ஆண்டு தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் இடம்பெற்றது. கால்பந்து விளையாட்டுத்திடத்தில் ஒரு குறிப்பிட்ட குழுவினால் பார்வையாளர் மீது சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

* இறுதிக்கட்ட தீர்ப்பு கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

* ஒன்பது பயங்கரவாத தடுப்பு பிரிவு நீதிபதிகள் சிறப்பு பணி ஆற்றியுள்ளனர். அவர்களே தீர்ப்பும் வாசிப்பார்கள்.

* கிட்ட்டத்தட்ட 542 பகுதிகளை கொண்ட இராட்சத கோப்புகள் இந்த வழக்கு தொடர்பாக எழுதப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்கங்கள் இதில் அடங்கியுள்ளன.

* இந்த பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்ட முக்கிய குற்றவாளிகளாக 20 பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். அவர்களில் பயங்கரவாதி Salah Abdeslam -உம் ஒருவன்.

இந்த ஒன்பது மாத கால வழக்கும் காணொளிகளாக பதிவு செய்யப்பட உள்ளன. இதற்காக தனியே மிக துல்லியமான கமராக்களும், ஒலிப்பதிவு மைக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை கட்டுப்பட்டுத்த மிக பாதுகாப்பான கட்டுப்பாட்டு அறையும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் முன்னர் எப்போதும் ஒரு வழக்கு இடம்பெற்றதில்லை. இதனாலேயே இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக உள்ளது.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!