இலங்கையில் அரிசி, சீனி கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றதா?

#SriLanka #prices #rice #sugar
Yuga
4 years ago
இலங்கையில் அரிசி, சீனி கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றதா?

அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புறக்கோட்டை பகுதியில் நேற்று (03) முதல் வர்த்தகர்கள், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட விலைகளுக்கு பொருட்களை விற்பனை செய்து வருவதை காண முடிகின்றது.

எனினும், புறக்கோட்டை பகுதியிலுள்ள சில வர்த்தகர்கள், கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்களை விற்பனை செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த நிலையில், அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

புறக்கோட்டை பகுதியில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை விபரங்கள் (ஒரு கிலோகிராம்)

01.சம்பா :- 102.00
02.கீரி சம்பா :- 125.00
03.நாட்டரிசி :- 97.00
04.வெள்ளை சீனி :- 120
05.சிவப்பு சீனி :- 122.00

இதேவேளை, புறக்கோட்டைக்கு வெளியிலுள்ள வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யப்படுவதில்லை என நுகர்வோர் கவலை வெளியிடுகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!