இங்கிலாந்தை துரத்தும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 66 லட்சத்தைத் தாண்டியது
#Covid Variant
Keerthi
4 years ago

இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் இந்த தளர்வுகள் ஆபத்து விளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38,281 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 66 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதேபோல், 140 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1.32 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் 12.45 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



