பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் தாய்வானில் சொந்த தடுப்பூசி பயன்பாடு

தாய்வான் உள்நாட்டில் உருவாக்கிய கொவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
மருத்துவ சோதனைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் “மெடிஜன்” என்ற தடுப்பு மருந்துக்கு தாய்வான் சுகாதார நிர்வாகம் அவசர பயன்பாட்டுக்காக கடந்த மாதம் அனுமதி அளித்திருந்தது.
தாய்வானில் தடுப்பு மருந்து பெறுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் அதன் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இழுபறி நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் புதிய தடுப்பூசியை அந்நாட்டு ஜனாதிபதி ட்சாய் லிங் வென் நேற்று போட்டுக்கொண்டார்.
23 மில்லியன் பேர் வசிக்கும் தாய்வானில் 40 வீதத்தினர், அஸ்ட்ரா செசெனகா மற்றும் மொடர்னா நிறுவனங்களின் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.
3 வீதத்தினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இருப்பினும், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மெடிஜன் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பல தாய்வானியர்கள் தயங்குகின்றனர்.
தடுப்பூசித் திட்டத்தை முடுக்கிவிட, மெடிஜன் தடுப்பு மருந்துகள் பேருதவியாக இருக்கும் என தாய்வான் நம்பிக்கை கொண்டுள்ளது.



