இணையத்தில் விற்கப்பட்ட சிறுமி போதைப்பொருளுக்கு அடிமை: நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு

15 வயது சிறுமியை இணையத்தில் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் போது ஒரு சந்தேக நபரைத் தவிர மற்ற சந்தேக நபர்கள் அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீதமுள்ள சந்தேகநபர் பிணைக்காக அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டிருந்தார்.
எனினும் குறித்த 15 வயதான சிறுமி இந்த நாட்களில் கடுமையான மன அழுத்தத்தினால் அவதிப்பட்டு வருவதால் அணிவகுப்பு நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் பாவனையால் குறித்த சிறுமி போதைக்கு அடிமையாகிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
அணிவகுப்பில் நிற்கும் அளவுக்கு சிறுமி நல்ல மனநிலையில் இல்லை என்று மனநல மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு மற்றும் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறுமி மனநல சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.



