கோவிட் வைரசுக்கு பயந்து மருத்துவமனைக்கு செல்ல தயங்க வேண்டாம் - மருத்துவர்கள்
#Corona Virus
#Covid 19
#Colombo
Prathees
4 years ago
பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கும் நபர்களுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கொழும்பு தேசிய மருத்துவமனையில் கடமையாற்றும் டொக்டர் ஹர்ஷ சதீச்சந்திரா தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸுக்கு பயந்து சிலர் மருத்துவமனையில் அனுமதிக்க தயங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், மாரடைப்பு போன்ற தீவிர நோய் ஏற்பட்டால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படாவிட்டால் துரதிருஷ்டவசமான விதியை சந்திக்க நேரிடும் என்று டொக்டர் ஹர்ஷ சதீச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சை பிரிவுகள் தனியாக இருப்பதால் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அவர் மேலும் கூறினார்.