மூச்சுப்பயிற்சி தியானம்

Prathees
2 years ago
மூச்சுப்பயிற்சி தியானம்

பெரும்பாலான மக்கள் செய்யும் முதல் தியானம் அமைதியாக அமர்ந்து, சுவாசத்தில் கவனம்செலுத்துதல். நாம் மனஅழுத்தத்தில் இருந்தால் நம்மை அமைதிப்படுத்த இது மிக உதவியாக இருக்கும்.

மூக்கு வழியாக இயல்பாக சுவாசித்தல் – அதிக வேகமாவும் இல்லை, மிகவும் மெதுவாகவும் இல்லை, மிகவும் ஆழமாகவும் இல்லை, மிகவும் மேலோட்டமாகவும் இல்லை.

மூச்சுப்பயிற்சியின் போது இரண்டு இடங்களில் கவனம் செலுத்துங்கள் – மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுத்து வெளியனுப்புதல் சக்தியை பெருக்க உதவும், நாம் தூங்குவது போலவோ அல்லது அடிவயிறு மேலும் கீழும் செல்வது போலவோ உணர்ந்தால் முடிவில் நம் மனம் அலைபாய்வதை அறியலாம்.
மனம் அலைபாய்ந்தால், ஒன்றில் இருந்து பத்து வரை எண்ணிக்கொண்டே விழிப்புடன் சுவாசித்து மூச்சை உள்ளிழுத்து வெளியனுப்ப வேண்டும், இதன் மூலம் கவனத்தை மீண்டும் மெதுவாக மூச்சுப்பயிற்சிக்கே திருப்பலாம்.

நாம் நம் மனதை நிறுத்திவைக்கவில்லை. நம்முடைய கவனம் அலைபாய்வதை இயன்ற வரை விரைவாக உணர்ந்து, அந்த நிலையில் இருந்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு உண்மையாக செயலாற்றுதல்; அல்லது, நாம் சோர்வாகவோ, உறங்குவது போன்றோ உணரத் தொடங்கினால், நம்மை நாமே எழுப்புதல். இது எளிதல்ல! 

சுவாசம் மூலம் தியானிப்பதன் பலன்கள்

மனஅழுத்ததை போக்க உதவுவதோடு, சுவாசத்தின் மூலம் தியானிப்பதால் வேறு சில பலன்களும் உள்ளன. நாம் எப்போதும் “கற்பனையில்” மிதப்பவராக இருந்தால், சுவாசத்தில் கவனம் செலுத்துவமதன் மூலம் நிஜ உலகில் இருப்பதை உணர உதவும். சுவாச தியானங்கள் சில மருத்துவமனைகளில் குறிப்பாக அமெரிக்காவில் வலி நிவாரண மேலாண்மைக்காக பின்பற்றப்படுகிறது. இவ்வகை தியானம் உடல் வலியில் இருந்து நிம்மதி தருவதோடு, உணர்வுகளின் வலியையும் குறைக்கிறது.

சுவாச தியானம் மூலம் நாம் நம்முடைய மனதை அமைதிபடுத்திவிட்டால், நம்முடைய திறந்த மற்றும் விழிப்பான மனநிலையைக்கொண்டு பிறரிடத்தில் அன்பை பெருக்க பயன்படுத்தலாம்.  தொடக்கத்தில், வெறுமனே “நான் இப்போது அனைவரையும் நேசிக்கிறேன்” என்று நினைக்கக் கூடாது, அதனை தவிர்த்து உண்மையிலேயே அவ்வாறு உணர வேண்டும். அதனை மிஞ்சும் சக்தி எதுவும் இல்லை. நேசித்தல் உணர்வை கட்டமைக்க நாம் பகுத்தறிவு சிந்தனையை பயன்படுத்தலாம்:

எல்லா உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை, நாம் அனைவரும் இங்கு ஒன்றாக இருக்கிறோம்.

மகிழ்ச்சியை விரும்புவதில் நாம் அனைவரும் சமமே, துன்பத்தை யாரும் விரும்புவதில்லை.
எல்லோராலும் விரும்பப்படவே ஆசைப்படுகிறோம், யாருமே வெறுப்பதையோ அல்லது புறக்கணிக்கப்படுவதையோ விரும்பவில்லை.

நான் உள்பட எல்லா உயிரினங்களும் ஒன்றே. நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் சார்ந்திருப்பவர்கள் என்பதால், நாம் இதனை உணர்வோம்:

ஒவ்வொருவருமே மகிழ்ச்சியாக இருக்கலாம், மகிழ்ச்சிக்கான காரணங்களும் இருக்கின்றன. எல்லோருமே பிரச்னைகள் ஏதுமின்றி மகிழ்ச்சியாக இருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்.

இவ்வாறு சிந்தித்து பாருங்கள், நம்முடைய மனம் சூரியன் போன்ற மஞ்சள் வெளிச்சத்தை அன்பு கலந்து ஒவ்வொருவருக்கும் எல்லா திசைகளிலும் பிரகாசிக்கச் செய்வதாக கற்பனை செய்து பாருங்கள். நம்முடைய கவனம் அலைபாய்ந்தால், “எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்” என்கிற உணர்வை மீண்டும் கொண்டு வரலாம்.