6 மாத குழந்தையை சித்திரவதை செய்த தாய்
ஜா-எல பிரதேசத்தில் தனது 6 மாத குழந்தையை தாயொருவர் கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது காதலன் என்று கூறப்படும் நபருடன் சேர்ந்து குறித்த குழந்தையை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையை துன்புறுத்தி அவர்கள் மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் ஜா-எல துடெல்லா பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயார். எனவும் குடும்ப தகராறு காரணமாக அவரது கணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் அந்த நேரத்தில் குழந்தையை தனது பாட்டி கவனித்து வந்துள்ளார்.
பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட அந்த பெண், தனது காதலனுடன் வந்து குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் பல நாட்களாக குழந்தையை துஷ்பிரயோகம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
தாயும் மற்ற நபரும் போதைக்கு அடிமையானவர்கள் என்று குழந்தையின் தந்தை குற்றம் சாட்டினார்.
குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சீதுவ மற்றும் ஜா-எல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாய் மற்றும் சம்பந்தப்பட்ட நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.