JR ஜெயவர்தனாவின் பயங்கரவாத சட்டத்தை, கோத்தாபாய மாற்றப்போகிறாராம்.
Nila
4 years ago
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தாய் இரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
அந்த வேண்டுகோளுக்கு இணங்க, 1978 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் சில உட்பிரிவுகளை திருத்துவதற்காக பாதுகாப்பு செயலாளர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த வேண்டுகோளுக்கு இணங்க, வெளிவிவகார அமைச்சு சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்தது.
தற்போதைய சூழ்நிலைகளில் பொருந்தாத சில உட்பிரிவுகளை திருத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.
