கோழி இறைச்சி விலை உயர்வுக்கு வாய்ப்பில்லை – உற்பத்தியாளர்கள் தெரிவிப்பு!

#SriLanka #prices #Chicken #Egg #LANKA4 #Market
Abi
30 minutes ago
கோழி இறைச்சி விலை உயர்வுக்கு வாய்ப்பில்லை – உற்பத்தியாளர்கள் தெரிவிப்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்படமாட்டாதென உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் கோழி இறைச்சி போதியளவு கையிருப்பில் உள்ளதால், தற்போது அதன் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் கோழி இறைச்சித் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான உற்பத்தி காணப்படுவதுடன், சந்தையின் தேவைக்கேற்ப விநியோகத்தை மேற்கொள்ளவும் முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் மாதத்தில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், போதியளவு குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சி கையிருப்பில் இருப்பதால் பாரிய விலை அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன் உற்பத்தி குறைவடைந்துள்ளமையே விலை உயர்வுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கால்நடைத் தீவன உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் சோளத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, அதற்குப் பதிலாக அரிசியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் முட்டை உற்பத்தி ஓரளவு குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் முட்டையின் விலை சந்தையின் கேள்வி மற்றும் விநியோகத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!