பெண்ணைக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் காட்டு யானைத் தாக்குதலில் காயம்!

#SriLanka #Death #Attack #Elephant #LANKA4 #Injury
Mahathi
17 minutes ago
பெண்ணைக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் காட்டு யானைத் தாக்குதலில் காயம்!

அநுராதபுரம் – எப்பாவல, கல்மடுவ பகுதியில் பெண்ணொருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (27) அதிகாலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில், கல்மடுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

ஹிங்குரக்கொட பகுதியிலிருந்து எப்பாவல பகுதிக்கு வந்த நபரொருவரே குறித்த பெண்ணைக் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

தாக்குதலை மேற்கொண்ட பின்னர், சந்தேகநபர் உந்துருளியில் ஹிங்குரக்கொட நோக்கித் தப்பிச் சென்றுள்ளார். இதன்போது, எப்பாவல – கெக்கிராவ பகுதியில் வைத்து அவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்த சந்தேகநபரைப் பிரதேச மக்கள் மீட்டு, 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவையின் ஊடாக எப்பாவல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர், பெண்ணைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் என்பது காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!