கனடாவில் 12,627 இலங்கையர்களின் அகதி விண்ணப்பங்கள் தீர்மானமின்றி நிலுவை!

#Canada #Australia #world_news #immigration #Applications
Mahathi
21 minutes ago
கனடாவில் 12,627 இலங்கையர்களின் அகதி விண்ணப்பங்கள் தீர்மானமின்றி நிலுவை!

கனடாவில் அகதி அந்தஸ்து கோரி இலங்கையர்களால் சமர்ப்பிக்கப்பட்ட 12,627 விண்ணப்பங்கள் இதுவரை தீர்மானிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக அந்நாட்டின் குடிவரவு மற்றும் அகதிகள் சபை (IRB) வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி, இலங்கையர்களின் 12,627 அகதி விண்ணப்பங்கள் முடிவெடுக்கப்படாமல் காணப்படுகின்றன.

கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை தொடர்பாக 2,663 அகதி விண்ணப்பங்கள் அகதிகள் பாதுகாப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அவற்றில் 1,019 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், 1,447 விண்ணப்பங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. நிலுவையிலுள்ள அகதி விண்ணப்பங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா, ஹைட்டி, மெக்சிகோ, நைஜீரியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளது.

அதேவேளை, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையர்களின் அகதி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட வீதம் 70 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 2025ஆம் ஆண்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 113,105 பேர் கனடாவில் அகதி அந்தஸ்து கோரியுள்ளனர். இது 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 34.2 சதவீத வீழ்ச்சியாகும்.

எனினும், இந்தப் புள்ளிவிபரங்கள் கனடாவில் வசிக்கும் ஒட்டுமொத்த இலங்கை அகதிகளின் எண்ணிக்கையைக் குறிக்கவில்லை என்பதுடன், அகதி அந்தஸ்து கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் நிலவரத்தையே பிரதிபலிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!