கெப் ரக வாகனத்திலிருந்து தவறி விழுந்த 13 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு!

#SriLanka #Student #LANKA4 #funeral
Mithra
27 minutes ago
கெப் ரக வாகனத்திலிருந்து தவறி விழுந்த 13 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வென்ச்சர் மேற்பிரிவு பகுதியில் கெப் ரக வாகனத்திலிருந்து தவறி விழுந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த துயரச் சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது. நோர்வூட்டிலிருந்து வென்ச்சர் 50 ஏக்கர் பகுதியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கெப் ரக வாகனத்தின் பின்புறத்தில் பயணித்த மாணவி, எதிர்பாராத விதமாக வாகனத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, மாணவி உடனடியாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவி வென்ச்சர் 50 ஏக்கர் தோட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் ஆரிஷ்னி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நோர்வூட் கல்லூரியில் தரம் 08 இல் கல்வி பயின்று வந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (26) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற விதம், மாணவி வாகனத்தின் பின்புறத்தில் பயணித்தமை மற்றும் வாகனத்திலிருந்து தவறி விழுந்தமை தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

13 வயதுடைய பாடசாலை மாணவியின் திடீர் உயிரிழப்பு வென்ச்சர் தோட்டப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!