18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை – இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அவதானம்!

#SriLanka
Mahathi
40 minutes ago
18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை – இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அவதானம்!

நாட்டின் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கத்திற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அநுராதபுரம், பதுளை, காலி, மன்னார், மாத்தறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சபரகமுவ, மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கடற்பகுதிகளுக்கும் எச்சரிக்கை! இதற்கிடையில், கடற்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் குறிப்பாக இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடுவோர் வானிலை எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!