சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் விவகாரம் – 5 மணிநேர விசாரணையின் பின்னர் வெளியேறினார் ரோஹித ராஜபக்ச!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ச, நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) சுமார் ஐந்து மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சுப்ரீம் சாட் (SupremeSAT) செயற்கைக்கோள் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது, குறித்த செயற்கைக்கோள் திட்டத்துடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அவரிடம் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சுமார் ஐந்து மணிநேர விசாரணைகளின் பின்னர் ரோஹித ராஜபக்ச இன்று (26) நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.
குறித்த செயற்கைக்கோள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.