பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு சுவிஸ் வாழ் தமிழர் சோதிடர் சுதாகர் வழங்கிய அறிக்கை விபரம்
சுவிஸ் நாட்டுக்கு உலக நிதியம் தொடர்பான ஒன்றுகூடலுக்கு வருகை தந்த் கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூர்ய அவர்கள் சூரிச் விமான நிலையத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட சுவிஸ் நாட்டில் இருந்து இயங்கும் இலங்கை வர்த்தகர்களை சந்தித்து உரையாடினார்.
அப்பொழுது சோதிடர் மற்றும் பொது ஆர்வலர் சுதாகர் உட்பட பல வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் சோதிடர் சோதிடர் சில திட்ட வரைவுகளை வழங்கினார்.
குறித்த அறிக்கை விபரம்:
1. பாடசாலை விடுமுறையில் மாற்றம்.
2. இலங்கையர் தினம் கொண்டாடும் காலம்.
3. வீதி விபத்துக்களைத் தடுக்கும் முன்னெடுப்பு.
4. பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பம் முதல் அவர்களுடைய துறைசார் அறிவைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான வேலைத் திட்டம்.
5. சுகாதாரமற்ற நிலையில் உள்ள வைத்தியசாலைகள், ஆலயங்கள் மற்றும் பொதுக் கழிப்பறைகள்.
6. மாணவர்களின் மொழி உச்சரிப்புத் தொடர்பான கல்வி.
7. வெளிநாட்டு வேலை வாய்ப்புகளால் இலங்கையில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள்.
8. சட்டவிரோத விபச்சாரம் பாலியல் தொழில்.
9. விவசாயிகளின் நன்மைக்காக விவசாய இறக்குமதி, பொருட்களின் வரிவிதிப்பு.
10 .மகாவலி நீர் ஏன் குழாய்களின் மூலம் வடக்கிற்கு அவசியம் என்னும் முழுத் திட்ட வரைவு.
11. பொருளாதார நன்மை, தீமைகள் உட்பட அனைத்தும்.
12. வெளிநாடுகளில் இருப்பவர்கள் இலங்கை வங்கியில் பணத்தை முதலீடு செய்யவும், எடுக்கவும் இருக்கக்கூடிய நடைமுறைச் சிக்கல்கள்.
13 .சிறு தொழில் செய்பவர்களுக்கான முதலீட்டுத் திட்டங்களுக்கு அங்கு இருக்கக்கூடிய அரச மற்றும் அரச ஊழியர்களின் தடைகளும், சட்டங்களும்.
14. உலகப் பொருளாதார வீழ்ச்சியும் அதனால் உல்லாச பயணத்துறையில் துறையில் ஏற்பட இருக்கின்ற பாதிப்புகளும்.
15. நமது நாட்டுப் பழங்களுக்கு வெளிநாடுகளில் இருக்கும் சந்தை வாய்ப்பு.
(செய்தி சோதிடர் சுதாகர்-சுவிஸ்)
(வீடியோ இங்கே )