திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் - தேரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு விளக்கமறியல்!
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தேரர்கள் உள்ளிட்ட 10 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்போது வழக்கை விசாரணை செய்த நீதவான் குறித்த 10 பேரையும் வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதியன்று, முறையான அனுமதி இன்றி கடற்கரை பாதுகாப்பு வலயத்திற்குள் புத்தர் சிலையை நிறுவப்பட்டது.
இந்த நிலையில், கடற்கரை பாதுகாப்பு திணைக்களம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், காவல்துறை சிலையை அகற்ற முயன்றபோது அங்கு பதற்றமான சூழல் உருவானது. தேரர்களும் பிரதேச மக்களும் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சட்டவிரோத கட்டுமானம் மற்றும் அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற காரணிகளின் கீழ், அவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்