பெண்களுக்குப் பாதுகாப்பான பயணம்: அமெரிக்காவில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது UBER!

#Women #America #world_news #Travel #ImportantNews #Uber #Driver #SHELVAFLY #L4
Lakhi
3 months ago
பெண்களுக்குப் பாதுகாப்பான பயணம்: அமெரிக்காவில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது UBER!

பெண் ஓட்டுநர்கள் மற்றும் பெண் பயணிகள் தங்களுக்குள் பயணங்களைப் பகிர்ந்து கொள்ளும் பிரத்யேக வசதியை Uber நிறுவனம் அமெரிக்கா முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது.

பெண் பயணிகள் பெண் ஓட்டுநர்களையே தேர்வு செய்யவும், ஓட்டுநர்கள் தங்களுக்குப் பெண் பயணிகளையே கோரவும் இந்த அம்சம் வழிவகை செய்கிறது. பதின்ம வயதினர் மற்றும் அவர்களது பெற்றோரும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த அம்சம் பாலினப் பாகுபாட்டைத் தூண்டுவதாகக் கூறி கலிபோர்னியாவில் வழக்குத் தொடரப்பட்டுள்ள போதிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்நடவடிக்கை என உபர் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே பிரேசில், சவுதி அரேபியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வசதி நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4