மக்களை திருப்திப்படுத்தும் வகையில் இடத்திற்கு ஏற்றாற்போல் கதைக்கும் ஜனாதிபதி - பிரதான எதிர்கட்சி குற்றச்சாட்டு!
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்யும்போது அந்தந்த பகுதி மக்களை திருப்திபடுத்தும் வகையில் ஜனாதிபதி கருத்துகளை முன்வைத்துவருகின்றார். இது ஏற்புடையது அல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்யும்போது அந்தந்த பகுதி மக்களை திருப்திபடுத்தும் வகையில் ஜனாதிபதி கருத்துகளை முன்வைத்துவருகின்றார். இது ஏற்புடையது அல்ல.
அரசாங்க தலைவர் பொது கொள்கையுடன் பயணிக்க வேண்டும். நாட்டில் எந்த பகுதிக்கு சென்றாலும் ஒரே கொள்கை அடிப்படையிலேயே கருத்துகளை முன்வைக்க வேண்டும். ஆனால் தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தும் விதத்திலேயே வடக்குக்கு சென்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றுகின்றார். நாட்டில் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன்தான் வாழ்கின்றனர்.
எனவே, இனவாதத்தை தோற்றுவிக்கும் விதத்தில் கருத்துகளை எவரும் முன்வைக்ககூடாது. அநுரகுமார திஸாநாயக்க என்பவர் எதிர்க்கட்சி தலைவர் அல்லர், அவர் நாட்டின் ஜனாதிபதி. ஆகவே, பொறுப்புடன் கருத்துகளை வெளியிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்