"போராட்டக்காரர்களை எதிரிகளாகவே கருதுவோம்" : ஈரான் காவல்துறைத் தலைவர் கடும் எச்சரிக்கை!

#Police #America #Israel #War #Warning #Iran #ISRO #SHELVAFLY #L4 #IranVsIsrael
Lakhi
3 months ago
"போராட்டக்காரர்களை எதிரிகளாகவே கருதுவோம்" : ஈரான் காவல்துறைத் தலைவர் கடும் எச்சரிக்கை!

ஈரானில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழலில், "எதிரிகளின் தூண்டுதலின் பேரில்" வீதியில் இறங்கிப் போராடுபவர்கள் போராட்டக்காரர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் 'எதிரிகளாகவே' நடத்தப்படுவார்கள் என்றும் ஈரான் காவல்துறைத் தலைவர் அஹ்மத்ரெசா ராடன் (Ahmadreza Radan) எச்சரித்துள்ளார்.

அரசுத் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். "யாராவது எதிரிகளின் பேச்சைக் கேட்டு வீதிக்கு வந்தால், அவர்களை தாங்கள், அவர்களைப் போராட்டக்காரர்களாகப் பார்க்க மாட்டோம், அவர்களை எதிரிகளாகவே கருதி, எதிரிகளுக்குக் கொடுக்கும் அதே தண்டனையை வழங்குவோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார். தங்கள் படைகள் புரட்சியைப் பாதுகாக்க எந்த நேரமும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 8-ஆம் திகதியன்று, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானிய மக்கள் தற்போதைய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும் என நேரடியாக அறைகூவல் விடுத்திருந்தார். ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இஸ்ரேல் விரும்புவதாக அந்தநாட்டு அதிகாரிகள் பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையிலேயே, ஈரானின் காவல்துறைத் தலைவர் அஹ்மத்ரெசா ராடனின் (Ahmadreza Radan) எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4