தாய்லாந்தில் ரயில் மீது விழுந்த பாரிய கிரேன் - பலி எண்ணிக்கை உயர்வு
#Death
#Accident
#Thailand
#Train
Prasu
2 hours ago
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானி மாகாணத்திற்கு 195 பேருடன் ரயில் சென்று கொண்டிருந்தது.
அந்த ரயில் நக்கோன் ராட்சசிமா மாகாணம் சிக்கியோ மாவட்டத்தில் விபத்தில் சிக்கியது. உயர்த்தப்பட்ட அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் ஒன்று திடீரென்று சரிந்து ரயில் மீது விழுந்தது.
இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
(வீடியோ இங்கே )