ஈரானில் தொடரும் போராட்டங்கள் - இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் மரணம்
#Death
#Protest
#government
#Iran
Prasu
1 hour ago
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக இடம்பெற்று வரும் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் போராட்டக்காரர்கள் எனவும், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச்சூட்டில் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அரசு தொலைக்காட்சியில் , பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை போராட்டங்களில் பங்கேற்க விடக்கூடாது என்றும், அவர்கள் சுடப்பட்டால் முறைப்பாடு அளிக்கக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
(வீடியோ இங்கே )