கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு தகுதி உள்ளதா? - சபாநாயகரிடம் அர்ச்சுனா எம்.பி கேள்வி!
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக இன்று அர்ச்சுனா எம்.பி சபாநாயகரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய அர்ச்சுனா, யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டில், “புற்றுநோயால் உயிரிழந்த எனது தாய் தொடர்பில் அநாகரீகமாக இழிவான வார்த்தைகளை கஜேந்திரகுமார் எம்.பி பிரயோகித்திருந்தார்.
சாதாரண அடிதட்டு மக்கள்கூட பயன்படுத்தாத இழிவான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருந்தார். எனவே, நாடாளுமன்ற ஒழுக்காற்று தொடர்பான குழுவில் இடம்பெறுவதற்கு கஜேந்திரகுமார் எம்.பிக்கு தகுதி உள்ளதா?
நாடாளுமன்றத்தில் எனக்கு அருகில் அமர்ந்திருக்கும் கஜேந்திரகுமாரை வேறொரு இடத்துக்கு மாற்று மாறு கோருகின்றேன். இது தொடர்பான விசாரணை நடக்கும்வரை நாடாளுமன்ற ஒழுக்காற்று மற்றும் சிறப்புரிமை குழுக்களில் இருந்து அவரை இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”