டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து
#Newzealand
#T20
#Cricket
#WorldCup
#SouthAfrica
#L4
Prasu
1 hour ago
டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இதில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின.
அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ஓட்டங்கள் எடுத்தது.
நிதானமாக விளையாடிய யான்சென் 55 ஓட்டங்களும் பிரேவிஸ் 34 ஓட்டங்களும் ஸ்டப்ஸ் 29 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 170 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.
அதிரடியாக டிம் சைபர்ட் 58 ஓட்டங்களும் பின் ஆலன் 100 ரன்கள் ஓட்டங்களும் குவித்தனர்.
இறுதியில் நியூசிலாந்து 12.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 173 ஓட்டங்கள் எடுத்து வென்றது.
இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
(வீடியோ இங்கே )