90 அடி உயரத்தில் இருந்து குதித்த முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தற்போது இயக்குனர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் ‘மைசா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
ஆக்ஷன் திரில்லரான ‘மைசா’ படத்தில், கோண்டு இனத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
ஆக்ஷன் பாணியில் உருவான இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், சிவ கந்துகுரி, கார்த்திக் ரஞ்சினி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மைசா’ படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக ராஷ்மிகா இடம்பெறும் நீருக்கடியில் சண்டைக்காட்சி அமைந்துள்ளது.
இந்திய சினிமாவில் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் நீருக்கடியில் சண்டைக்காட்சிகளில் ஒன்றாக இதனை படக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறும்போது ஒரு காட்சியில் 90 அடி உயரத்தில் இருந்து குதித்தது குறித்து தனது திகில் அனுபவத்தை விவரித்துள்ளார்.
அதில், “எனக்கு எப்போதுமே உயரம் மற்றும் பாம்புகள் மீது மிகுந்த பயம் உண்டு அந்த வகையில் ‘மைசா’ படத்திற்காக ஒரு காட்சியில் 90 அடி உயரத்திலிருந்து குதிப்பதற்கு தயாரானேன்.
எனக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளாக வயர்கள் உள்ளிட்ட சாதனங்கள் என்னுடன் இணைக்கப்பட்டிருந்தன. அதுவே எனக்கு மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியது" என குறிப்பிட்டுள்ளார்.