கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாடு - பிரதமர் தலைமையில் சிறப்பு கூட்டம்!
#SriLanka
#Ministry of Education
#ADDA
#Harini Amarasooriya
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 day ago
பாடத்திட்ட மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கான சைபர் பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல் குறியீட்டைத் தயாரிப்பதற்கும், மதிப்பாய்வு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (06) அலரி மாளிகையில் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
6 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான பணிக்குழுவின் கீழ் செயல்படும் ஆன்லைன் பாதுகாப்பு, டிஜிட்டல் நல்வாழ்வு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.
ஆன்லைன் பாதுகாப்பு, டிஜிட்டல் நல்வாழ்வு மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்த விரிவான வழிகாட்டுதல் கட்டமைப்பை உருவாக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”