நடிகையின் காதுக்குள் பல நாட்களாக வாழ்ந்த உண்ணி பூச்சி! இறுதியில் நடந்த விபரீதம்
பிரபல சிங்கள நடிகை சுலோச்சனா என்ற பெண்ணின் காதுக்குள் பல நாட்களாக உண்ணி உயிருடன் இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த உண்ணியை அகற்றிய சம்பவம் தொடர்பான அனுபவ பகிர்வை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இது தற்போது பரவலாகி வருகின்றது. முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் தெரிவிக்கையில், டிசம்பர் 28 ஆம் திகதி இரவில் காதில் வலி ஆரம்பித்தது.
காலை வரை தூங்கவில்லை. அதனால் மெதுவாக வந்த வலி என்று நினைத்தேன். 29ஆம் திகதி காலை எனக்கு ஞாபகம் இருக்கிறது. காற்று அடிக்கும் சாலையில் போகும் போது, பறவைகள் சத்தமிடுவது போல இருந்தது.
ஒரு மிருகம் காதுக்குள் புகுந்திருக்கும் போல நினைத்தேன். என் மைத்துனர் டாக்டர் அண்ணாவிடம் கேட்டேன். “இரவில் தண்ணீர் விட்டால் அது இறந்துவிடும்” என்றார். ஆனால் அது கடினமாகத் தோன்றியது. ENT மருத்துவரைக் காண்பது நல்லது என்று நினைத்தேன். பெரிய வலி இல்லை என்பதால் கொஞ்சம் காத்திருக்கலாம் என்று முடிவு செய்தேன்.
30 ஆம் தேதியும் கடந்தது. காதுவலி கொஞ்சம் அதிகரித்தது. இரண்டு மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலியா சென்றபோது எனக்கு கடும் குளிர் பிடித்தது. அதுபோன்றதே என்று நினைத்து இன்னும் தாங்கிக்கொள்ள முயன்றேன். இருப்பினும் அது முடியாதிருந்ததால் உடல்நிலை சரியாகததால் எப்படியோ காலையில் வீட்டுக்கு வந்த டாக்டரிடம் காதைக் காட்டினேன். அவர் விவரங்களை கேட்டுப் பார்த்து, டார்ச் வைத்து காதைச் சோதித்தார்.
மெதுவான வீக்கம் இருக்கிறது என்றார். மருந்து கொடுத்தார். மூன்று டோஸ் எடுத்துப் பார்த்து குறையவில்லை என்றால் மீண்டும் பார்க்கலாம் என்றார். 10.30க்கு மருந்து குடித்து தூங்க முயன்றேன். குழந்தை தூங்கிவிட்டது.
ஆனால் இரவு 12 மணியிலிருந்து வலி வெடித்தது. காலை 7 மணி வரை தாங்க முடியாத வலி. வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி அது. என் வாழ்க்கையில் அனுபவித்த மிக மோசமான வலி. என் காதுச்சவ்வு உள்ளே சுழன்று கிழிக்கப்படுவது போல இருந்தது.
முழு தலை உடைந்து போகும் போல.
அதனையடுத்து ஹீமாஸ் மருத்துவமனைக்கு அலறிக்கொண்டே ஓடினேன். எப்படியோ அவசர சிகிச்சைப் பிரிவை அடைந்தேன்.பின்னர் மருத்துவமனைக்குச் சென்று நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மருத்துவர்கள் பூச்சியை அகற்றினர்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”