கனடாவில் 30 வயதுடைய இந்தியப் பெண் சடலமாக மீட்பு
#Canada
#Murder
#Women
#Indian
Prasu
2 hours ago
கனடாவின் டொரண்டோ நகரில் வசித்து வந்த ஹிமான்ஷி குரானா என்ற 30 வயதுடைய இந்தியப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அவரது காதலரான 32 வயதுடைய அப்துல் கபூரி என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
டொரண்டோ காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையின்படி, இது ஒரு திட்டமிட்ட கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த ஹிமான்ஷியும், சந்தேகநபராகக் கருதப்படும் அப்துல் கபூரியும் நெருக்கமான உறவில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அப்துல் கபூரிக்கு எதிராக முதல்தரக் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, கனடா முழுவதும் அவரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )