மற்றுமொரு தொகுதி நிவாரண பொதிகளுடன் நாட்டை வந்தடைந்த இந்திய கப்பல்!
#SriLanka
Mayoorikka
5 hours ago
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நிவாரண பொதிகளுடன் மற்றுமொரு இந்திய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
இந்தியாவால் "ஒப்பரேஷன் சாகர் பந்து" என பெயரிடப்பட்ட திட்டத்தின்கீழ், சௌரியா எனும் கப்பல் நேற்று திங்கட்கிழமை (15) மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
1,000 தொன்களை விட அதிகமான பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.'' அந்த வகையில் உப்பு, கோதுமை மா, மிளகாய், குடிநீர் போத்தல்கள், சீனி, சோயாமீட் உள்ளிட்ட பல பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் அரசாங்கத்திடம் குறித்த நிவாரண பொருட்கள் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
