மூன்று வாரங்களிற்குள் மேல் மாகாண கழிவுகளை அகற்ற வேண்டும்! பிரதமர்
#SriLanka
Mayoorikka
1 hour ago
மேல் மாகாண கழிவு முகாமைத்துவக் குழுக் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நேற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, அனர்த்த நிலைமை காரணமாக குவிந்துள்ள கழிவுகளை முறையான வகையில் அகற்றி, துப்புரவு பணிகளை மூன்று வாரங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் சேரும் கழிவுகளை விரைவாக அகற்றுவதற்காக காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கெரவலப்பிட்டியவில் உள்ள காணியிலிருந்து ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளதால், அதற்கமைய தற்போது சேரும் கழிவுகளை எவ்வித சிக்கலுமின்றி அகற்ற முடியும் என குழு தீர்மானித்தது.
அக்காணியில் சேகரிக்கப்படும் கழிவுகளை முறையாக அகற்றுவதற்கும் அங்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
