இன்றைய ராசிபலன் (05.12.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (05.12.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: எடுத்த வேலைகளில் லாபம் காணும் நாள். பணவரவு திருப்தி தரும்.

பரணி: நீங்கள் நினைப்பது நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும்.

கார்த்திகை 1: நேற்றைய சங்கடங்கள் நீங்கும். உற்சாகமுடன் செயல்படத் தொடங்குவீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: முயற்சி ஆதாயத்தில் முடியும். வருமானம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.

ரோகிணி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனம் தெளிவடையும்.

மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் தோன்றிய பிரச்னைகள் விலகும். வேலையில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: செலவு அதிகரிக்கும் நாள். நினைத்ததை நடத்தி நன்மையைக் காண்பீர்.

திருவாதிரை: பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும்.

புனர்பூசம் 1,2,3: நெருக்கடிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். வாகனத்தால் செலவு ஏற்படும்.

கடகம்

புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். எதிர்பாராத வரவால் பொருளாதார நிலை உயரும்.

பூசம்: நீண்ட நாளாக நீடித்து வந்த ஒரு பிரச்னை தீரும். புதிய வேலைகள் வெற்றியாகும்.

ஆயில்யம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத்துணை ஆலோசனை நன்மை தரும்.

சிம்மம்

மகம்: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். வருமானம் அதிகரிக்கும்.

பூரம்: கவனமுடன் செயல்பட்டு ஆதாயமடைவீர். பழைய பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்.

உத்திரம் 1: கடந்தகால அனுபவம் இன்று கை கொடுக்கும். வியாபாரத்தில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.

அஸ்தம்: திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

சித்திரை 1,2: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தெய்வ வழிபாட்டால் மனம் தெளிவடையும்.

துலாம்

சித்திரை 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் நெருக்கடி ஏற்படும்.

சுவாதி: மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் சங்கடங்களை சந்திப்பீர். வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்

விசாகம் 4: நன்மையான நாள். நட்பு வட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும்.

அனுஷம்: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

கேட்டை: உங்கள் செயலில் வேகம் இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

தனுசு

மூலம்: நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வரவேண்டிய பணம் வரும்.

பூராடம்: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை உங்கள் செல்வாக்கால் சரிசெய்வீர்.

உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். மனதில் நிம்மதி ஏற்படும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். நேற்றைய நெருக்கடி நீங்கும்.

திருவோணம்: குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர். பிள்ளைகள் உங்களுக்கு உதவியாக இருப்பர்.

அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உறவினருக்காக ஒரு வேலையை மேற்கொள்வீர்.

கும்பம்

அவிட்டம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று எளிதாக நடந்தேறும்.

சதயம்: சிறு வியாபாரிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பணியில் இருந்த நெருக்கடி நீங்கும்.

பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்கள் முயற்சியை லாபமாக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். ஆதாயம் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

ரேவதி: உற்சாகமாக செயல்படுவீர். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை