எலிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடவும்!
கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள நிலைமையின் பின்பு மக்களுக்கு தெளிவூட்டுவது தொடர்பான ஊடக சந்திப்பு கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையில் பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சிவஞான சுந்தரம் சேரலாதன் மற்றும் மாவட்ட சமுதாய மருத்துவர் வைத்தியர் திருமகள் சிவசங்கர் இணைந்து நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தனர்.
தொடர்ந்து தெரிவிக்கையில் தற்போது வெள்ளம் வடிந்து மக்கள் வீடுகளுக்கு செல்கின்ற நிலையில் நீர்ச்சிரங்கு ஏற்படுவதை தவிர்க்க பாதங்களை மெல்லிய சுடுதண்ணீரில் கொண்டிஸ் பளிங்குகளை இட்டு பாதங்களை கழுவினால் நீர்ச்சிரங்கு இல்லாது போகும் வெள்ளத்தின் பின்பு எலிக்காய்ச்சல் பரவும் நிலை காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.விவசாயிகள், வெள்ள அனர்த்தங்களில் கடமையாற்றுபவர்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் ஆலோசணைகளைப்பெற்று வாரம் ஒரு முறை தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எலிக்காய்ச்சல் அறிகுறியான கடுமையான காய்ச்சல், தலைவலி, வயிற்றுநோ போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை நாடி உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும் .
குறித்த அறிகுறிகளை கருத்தில் கொள்ளாது இருந்தால் எலிக்காய்ச்சல் காரணமாக மூளை, சிறுநீரகங்கள், ஈரல் பாதிக்கப்பட்டால் மரணம் நிச்சயம் வாந்தி பேதி நெருப்புகாய்ச்சல் செங்கண் மாரி போன்றவை இலையான் கழிவுகளில் இருந்து உணவுகளில் இருப்பதால் குறித்த நோய்கள் ஏற்படுகின்றன.
மழை ஓய்ந்து ஏற்படுகின்ற வெய்யில் காரணமாக நுளம்பு முட்டை இட்டு டெங்கு போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. நுளம்பு பரவக்கூடிய சூழலை இல்லாது வைத்திருக்க வேண்டும் சிறு குழந்தை ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அதிக குளிர்காரணமாக சீனியின் அளவு குறைந்து இறப்பு கூட ஏற்படலாம் தாய்மார்கள் அவதானமாக குழந்தையை பராமரிக்க வேண்டும் .
பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கிணறுகளுக்கு குளோரின் இடுவார்கள் அவர்கள் குளோரின் இடும் மட்டும் கொதித்தாறிய குடிநீரையே பருகுங்கள் மக்களுக்கான சுகாதார ஆலோசணைகளை வழங்குவதற்கு மாவட்டத்திலுள்ள நான்கு சுகாதார வைத்திய அதிகாரிகளை எப்பொழுதும் தொடர்பு கொள்ளமுடியும் என தெரிவித்தார்.
கரைச்சி -0774433172
கண்டாவளை -0777252136
பூநகரி -0772364680
பளை-0776630613
(வீடியோ இங்கே )
அனுசரணை
