காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு டிசம்பர் 25 வரை காலக்கெடு!
2025 நவம்பர் 25 முதல் டிசம்பர் 25 வரை காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை வைத்திருக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்று இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிலவும் பாதகமான வானிலை மற்றும் இயற்கை பேரிடர் சூழ்நிலை காரணமாக, பல சாரதிகள் தங்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களை சரியான நேரத்தில் புதுப்பிக்க முடியாமல் போனதால், அவர்களின் ஓட்டுநர் நடவடிக்கைகளைத் தொடர்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிப்பதற்கு சிறப்பு சலுகைக் காலத்தை வழங்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, 2025 நவம்பர் 25 முதல் டிசம்பர் 25 வரை சாரதி அனுமதிப் பத்திரங்கள் காலாவதியான சாரதிகள், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாகக் கருதப்படாமல் தொடர்ந்து வாகனம் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
