ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை!

#world_news #Oman #Living #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை!

ஓமானில் வாழும் இலங்கையர்களின் நலன் தொடர்பில் ஓமான் வெளியுறவு அமைச்சர் சையித் பத்ர் அல் புசைதி (Sayyid Badr Albusaidi) யிடம் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இதன்போது, பிராந்தியத்தில் நிலவிவரும் சூழல் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் உறுதிப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். ”ஓமான் வெளியுறவு அமைச்சர் சையித் பத்ர் அல் புசைதி (Sayyid Badr Albusaidi) யுடன் உரையாடினேன். 

இதன்போது, பிராந்தியத்தில் நிலவிவரும் சூழல் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் உறுதிப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்தினேன்.

ஓமானில் வாழும் இலங்கை சமூகத்தினருக்கு ஓமான் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்காக எனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.

ஓமானிலுள்ள இலங்கை பிரஜைகளின் நலன் மற்றும் நல்வாழ்விற்காக ஓமான் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அமைச்சர் அல் புசைதி உறுதியளித்தார்.”

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4